
சென்னை: தென்மேற்கு வங்க கடலில் 14-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழி வலுவடைந்து 16-ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மை இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மழை தொடரும்வெப்பச் சலனத்தால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ...