
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா வரும் திங்கட்கிழமை மீண்டும் பதவியேற்க உள்ளார். 134 தொகுதிகளில் வென்ற அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைக்கிறது. சென்னை பல்கலைகழகத்தின் நூற்றாண்டு அரங்கில் அவரது பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் திங்கட்கிழமை பகல் 12 மணியளவில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். தற்போது ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். ஜெயலலிதா தலைமையில் புதிய ...