
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அனைத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலம் பணம் செலுத்தி பெற தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் இணையதளம் மூலம் விற்பனை செய்து வருகிறது. பணம் செலுத்த முடியாத பகுதியை சேர்ந்தவர்கள் எளிதாக பாடநூல் வாங்கிக் கொள்ள வசதியாக, வட்ட அளவில் செயல்படும் அரசு பொது இ-சேவை மையங்கள் மூலம் பணம் செலுத்தி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடநூல்களின் விவரம் மற்றும் விலை ஆகியவை அரசு இ-சேவை மையங்களில் உள்ள ...