
சென்னை: மதுரை, சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் வரும் 22ம் தேதி முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 24ம் தேதி முதல் 2019 மார்ச் 2 வரை தண்ணீர் திறந்து விடவும், தேனி மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு வரும் 24ம் தேதி முதல் 143 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.