
தாம்பரம்: தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக இருந்தவர் பரிதாபானு. இவர், வாக்காளர் பட்டியலில் ஏராளமான குளறுபடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது பெயரையும் விதிகளை மீறி பட்டியலில் சேர்த்திருந்தார். இதுபோல, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பல ஆயிரம் போலி வாக்காளர்களை சேர்த்ததாக தெரிகிறது.இதுதொடர்பான புகாரில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் செயலாளர், தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட மதுரைப்பாக்கம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலியாக வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்டது தெரியவந்தது. இதன் ...