
சென்னை: விழுப்புரம் எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் உள்ள 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெற்றோர்கள் சார்பாக வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி கல்லூரி நிர்வாகிகளுக்கு ஜாமீன் தரக் கூடாது என்றார். இதை கேட்ட நீதிபதி, இதுகுறித்து தனியாக மனு தாக்கல் செய்யுங்கள் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர ...