
சென்னை: ஸ்மார்ட் போன் மூலம் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், நவீன கருவி மூலம் ஆதார் எண் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு ஆதார் அட்டையை எடுத்து சென்று காண்பித்தால் குடும்ப உறுப்பினர்கள் விவரம், சிலிண்டரின் எண்ணிக்கை, செல்போன் எண் போன்ற அனைத்து விவரங்களையும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பதிவு செய்து கொள்கிறார்கள். இந்த தகவல் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே மின்னணு ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்ட்) ...