
சென்னை : சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால், அந்த பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. அண்ணாவின் 108வது பிறந்த தினத்தையொட்டி நேற்று பகல் 11.15 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அங்கு அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அண்ணா பிறந்தநாள் சிறப்பு மலரை ஜெயலலிதா வெளியிட சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா பெற்றுக்கொண்டார். அமைச்சர்கள், ...