
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சி பீமா நகரைச் சேர்ந்த ஐ.ஜெயினுல்லாபுதீன் தாக்கல் செய்துள்ள மனு: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 2007 முதல் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறேன். பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் பலமுறை மனு கொடுத்துள்ளேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு 47 பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்று கடந்த ஜூலை16ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது, இளநிலை உதவியாளர் பணியைச் செய்து வரும் என்னை நீக்கிவிட்டு மீண்டும் அதே பதவிக்கு புதிய ஆட்களை தேர்வு செய்ய ...