
சென்னை : தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் உட்பட 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த 8ம் தேதி முதல் சேப்பாக்கம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் போராட்டத்தை கைவிட்டனர். ...