
சென்னை : கோடைக்கால நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே அறிவித்த பல மடங்கு தட்கல் கட்டண சுவிதா சிறப்பு ரயில்களில் நூற்றுக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன. கோடை காலங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்து வந்த ரயில்வே இப்போது லாப நோக்கில் பல மடங்கு தட்கல் கட்டண சுவிதா சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. வழக்கமான ரயிலை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். எப்போதும் இரண்டாம் வகுப்பு சாதாரண பெட்டிகளில் பயணிக்கும் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு ரயில்கள் என்பது கனவாகி விட்டது. சுவிதா ரயில்களில் ...