
பல்லாவரம் : பல்லாவரம் தொகுதியில் கடந்த முறை அதிமுகவால் தேர்தல் வாக்குறுதியாக முன் வைக்கப்பட்ட பல பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இத்தேர்தலிலும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் அவை இடம்பெற்றுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற தன்சிங் குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. கடந்த சட்டசபை, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட எந்த பணியும் வெற்றிபெற்றபின் நிறைவேற்றப்படவில்லை. பல்லாவரம் ...