
சென்னை: சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் காணாமல் போவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிய 2 குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் அதிகளவில் காணாமல் போவதாகவும், குறிப்பாக சென்னை சாலையோரத்தில் வசிக்கும் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சாலையோரத்தில் வசித்த 8 மாத குழந்தை ஒன்று ...