
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படும். நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில், 100 வயதில் இருந்து அதற்கு மேல் 130 வயது வரை தமிழகத்தில் 7,627 மூத்த வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக 130 வயது வரை 28 பேர் உள்ளனர். அதிகபட்சமாக, வேலூர் மாவட்டத்தில் 100 வயதை கடந்த 597 வாக்காளர்களும், குறைந்த அளவாக கரூர் மாவட்டத்தில் 100 வயதை கடந்தவர்கள் 38 பேரும் உள்ளனர். சென்னையில் மட்டும் 434 பேர் 100 வயதை ...