
சென்னை: தமிழக பொதுப்பணித் துறையில் உள்ளபடி வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் டிரைவர்கள், பாசன உதவியாளர்கள் உள்பட பலருக்கு தொழில்நுட்ப உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி பதவி உயர்வு வழங்க தலா ரூ. 5 லட்சம் ஒவ்வொருவரிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பொதுப்பணித்துறையில் பொறியாளர் சார்பு தொகுதி என்ற துணை பிரிவு உள்ளது. இதில், பணி ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர் என 1,500க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் பணிபுரிகின்றனர். இதில், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளருக்கு உதவியாக தொழில்நுட்ப உதவியாளர்கள், ...