
சென்னை:சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 சட்டமன்ற தேர்தல் தொகுதிகள் உள்ளன. சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தரமோகன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகமான ரிப்பன் மாளிகையில் சந்திரகுமார் தலைமையில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை போலீஸ் கமிஷனர் அசுதோஷ் சுக்லா, பாதுகாப்பு தொடர்பாக எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்தார். ...