
சென்னை: தமிழகத்தில் வரும் 16ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆண்கள் 6,352, பெண்கள் 795, திருநங்கைகள் 4 பேர் உள்பட 7,151 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 3 மணி வரை 3386 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் நடைபெற இருக்கும் ...