
சென்னை: பொள்ளாச்சி பொறியியல் கல்லூரியில் படித்து வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த தலித் மாணவன் சங்கர், பழனியை சேர்ந்த சகமாணவி கவுசல்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த மாதம் உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கொலை வெறி தாக்குதலில் கவுசல்யா படுகாயம் அடைந்தார். இந்த ஆணவக் கொலை மற்றும் கொலை வெறி தாக்குதல் வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் பிரச்சன்ன குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். ...