
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியார் பொழுது போக்கு பூங்காவில் நேற்று ராட்டினம் சரிந்து விழுந்ததில் மணி என்பவர் பலியாகியுள்ளார். மேலும் இந்த விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த பூங்காவில் புதிதாக டிஸ்கோ என்ற ராட்டினத்தை தயார் செய்து கொண்டுள்ளனர். இதற்கான சோதனை ஓட்டத்திற்காக ராட்டினத்தை இயக்கிய போது ராட்டினம் சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார், மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 9 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் ...