
சென்னை: சென்னையில் வரும் ஞாயிற்றுகிழமையன்று இரவே கனமழை துவங்க வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய நாட்டு வானிலை ஆய்வு மையமான இன்டெலிகாஸ்ட் முன்னறிவிப்பு செய்துள்ளது. தேர்தல் நாளான மே 16-ம் தேதி பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அந்த வானிலை மையம் கூறியுள்ளது. வரும் 16-ம் தேதி திங்கட்கிழமையன்று சென்னையில் 3 செ.மீ மழை பெய்ய 100 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தேர்தல் நாளன்று மழை பெய்ய ...