
சென்னை: தமிழக தொழிலாளர் துறை ஆய்வாளர் எஸ்.நீலகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வரும் 16ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணைய நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும். இதற்கு ஏதுவாக, சென்னையில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் அனைத்து வகையான பொது, தனியார் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். இவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உட்பட ...