
சென்னை: சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட அனுப்பூரை சேர்ந்தவர் ஏ.பி.மணி. அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அதிமுக செயலாளரான இவர், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர். இவரது வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை 8 மணியளவில் சென்றனர். உடனே அவர் காரில் வெளியே செல்ல முயன்றார். அதிகாரிகள் குழுவினர் அதிரடியாக அந்த காரை சோதனையிட்டனர். அதில் இருந்த 10.48 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா பன்னீர்செல்வத்தின் கணவரும் நகரமன்ற தலைவருமான ...