
சென்னை: கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் அமைச்சர் வளர்மதி, அதிமுக எம்பி ஜெயவர்தன், மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்பட பல அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இரவு 10 மணி அளவில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வாண வேடிக்கை நடத்தப்பட்டது. அப்போது, வெடி ஒன்று தவறுதலாக சென்று அருகில் உள்ள வீட்டின் அருகே விழுந்து வெடித்தது. வெடி சக்தி வாய்ந்தது என்பதால் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த வீடுகளின் கண்ணாடிகள் ...