
திருவள்ளூர் : தமிழகத்தில், நேற்று சட்டமன்ற தேர்தல் நடந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை தவிர்க்க, 14ம் தேதி முதல் 16ம் தேதி நேற்று வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டாலும், அரசியல் கட்சியினர், பார் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்தனர். பிராந்தி, விஸ்கி, பீர் ரகங்களும் பதுக்கி வைக்கப்பட்டன. சரக்கு பாட்டில்களை பதுக்கி வைத்தவர்கள், 3 நாட்களாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். ரூ.80 மதிப்புள்ள குவாட்டர் பாட்டில், ரூ.150க்கும், ரூ.100 மதிப்பிலான பீர் பாட்டில், ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தேர்தல் தினத்தன்று ...