
சென்னை; கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம் என்றார். இதுவரை இல்லாத வகையில் அதிக தொகுதிகளை பெற்று திமுக எதிர்கட்சியாக அமர உள்ளதாக குறிப்பிட்டார். கடந்த காலத்தில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் சென்னையில் அதிமுக பெற்றுள்ள தோல்வி அதிமுகவின் அலங்கோல ஆட்சிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு என்றார். ...