
உலகில் மனிதனுக்கு அடிப்படை வசதிகளான சுவாசிக்க தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர், நல்ல உணவு, குடியிருக்க பாதுகாப்பான வீடு ஆகியவை கண்டிப்பாக இருந்தால் மட்டுமே அந்த நிறைவானதாகவும் நிம்மதியான சமுதாயமாக கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் சில மன்னர்களால் மட்டுமே தனது நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்க முடிந்தது. அத்தகைய மன்னர்களின் பெயர்கள் இன்று வரை நிலைத்து நிற்கிறது. இதற்கு உதாரணமாக பண்டைய காலத்தில் கலிங்க தேசத்து மன்னர் அசோக சக்கரவர்த்தி ஊர் தோறும் குளம் வெட்டி நீர் நிலைகளை பெருக்கினார். அவர் ஆண்டு வந்த பகுதிகளில் சாலையோரங்களில் ஏராளமான ...