
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புயல் கரை கடந்ததால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தியது. இதையடுத்து சென்னை, மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. ஏப்ரல் மாதமே 100 டிகிரியை வெயில் தாண்டியது. மே மாத தொடக்கத்தில் 108 டிகிரி வரை வெயில் அதிகரித்தது. இதையடுத்து மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திர நாட்கள் தொடங்கின. இதனால் மேலும் வெயில் அதிகரித்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மே 13ம் தேதி வரை வாட்டி வதைத்த வெயிலை ...