
சென்னை : பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை, கலை அறிவியியல் என அவரவர்களுக்கு விருப்பம் உள்ள துறையை தேர்வு செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஊருக்கு ஒரே ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி மட்டுமே இருந்து வந்த நிலை மாறி, காலப்போக்கில் அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் தனியார் கல்லூரிகளின் ...