
ஆலந்தூர்: ஆதம்பாக்கம் - வேளச்சேரி இடையே வேளச்சேரி ஏரி உள்ளது. சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி 50 ஏக்கராகி குறுகி விட்டது. கோடை காலத்தில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியில் படகு சவாரி ஏற்படுத்தி சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். ஏரியை சுற்றிலும் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் மேயர் துரைசாமி மற்றும் அமைச்சர்கள் ஏரியை பார்வையிட்டு சென்றனர். அதன்பிறகு ஏரியில் பரவியிருந்த ஆகாயத் தாமரை செடிகளை ரசாயனக் கலவை மூலம் அகற்ற நடவடிக்கை ...