
சென்னை : சென்னையில் 6 வயது பள்ளி சிறுமி ஓடும் பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து இறந்தாள். இதனை தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பள்ளி வாகனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. கோடைவிடுமுறை முடிந்து, பள்ளிகள் ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. பள்ளி வாகனங்களை அதற்கு முன்பு சோதனை செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையில், கடந்த 28ம் தேதி கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மேல்நிலைப்பள்ளியில் வாகனங்கள் ஆய்வு நடந்தது. மொத்தம் 63 ...