
சென்னை : சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தேவையான அனைத்து அம்சமும் உள்ளது. நாட்டின் வர்த்தக மேம்பாட்டில் இத்துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நாள்தோறும் சுமார் 3 ஆயிரம் கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. பாரதி, நேரு, அம்பேத்கர் ஆகிய மூன்று சரக்கு முனையங்கள் உள்ளன. டிபி வேல்டு, சிஐடிபிஎல் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் கன்டெய்னர்கள் கையாளப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு இங்கு வர்த்தகம் நடக்கிறது. ஆரம்பத்தில் நன்கு லாபத்தில் இயங்கி வந்த இத்துறைமுகம், சில ஆண்டாக பெரும் நஷ்டத்தில் இயங்குகிறது. ...