
சென்னை: சென்னை துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள், துறைமுகத்துக்கு அருகே கடலில் நிறுத்தி வைக்கப்படும். இந்த கப்பல்களை துறைமுகத்துக்கு உள்ளே இழுத்து வரும் பணியையும், கப்பல் போக்குவரத்துக்கான சிக்னலை வழங்கும் பணியையும் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். இவர்கள், கூடுதல் நேரத்துக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும் எனக்கோரி திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராடத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இதனால் துறைமுகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. துறைமுகத்துக்கு வெளியே கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் எதுவும் ...