
சென்னை: தவறான அறுவை சிகிச்சையால் பெண் நோயாளி கவலைக்கிடமாக மாறியதால் தனியார் மருத்துவ மனையை கண்டித்து உறவினர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். எண்ணூர், தாழங்குப்பம், எக்ஸ்பிரஸ் சாலையை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சித்ரா (45). இவர்கள், தங்களது வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். தம்பதிக்கு சுந்தர் என்ற மகனும், சுகுணா என்ற மகளும் உள்ளன. சுந்தர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். சுகுணாவை திருப்போரூர் அருகே ஆமூர் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சித்ராவுக்கு தொடர் வயிற்றுவலி ஏற்பட்டது. ...