
சென்னை: தமிழக முதல்வர் காவலர்களுக்காக திறந்து வைத்த குடியிருப்புகள் பழுதடைந்து உள்ளதால் புகார்கள் எழுந்துள்ளதால் இதனை சீரமைக்க வேண்டும் என காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் மேலகோட்டையூரில் ரூ.460 கோடி செலவில் 2673 குடியிருப்புகள் கட்டப்படும் என கடந்த 2012ம் ஆண்டு அறிவித்ததன்படி தற்போது குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்காக போலீசாரிடம் இருந்து தலா ரூ.1.25 லட்சம் பணம் பெற்றதாக தெரிகிறது. மீதமுள்ள தொகையை மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து பிடித்தம் ...