
சென்னை: சென்னையில் மாயமானவர் புதுச்சேரி லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், முருகப்பா காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (32), வாஷிங் மெஷின் பழுது பார்ப்பவர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை. கடந்த 1ம் தேதி மணிகண்டன் வீட்டிலிருந்து சென்னை அண்ணா நகரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மனைவி மற்றும் பெற்றோர் பல இடங்களில் தேடியும் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ...