
துரைப்பாக்கம்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற ராஜிவ்காந்தி சாலையின் மத்திய பகுதியான சோழிங்கநல்லூரில் அரசு மருத்துவமனை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை ராஜிவ் காந்தி சாலை, அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து தொடங்கி சிறுசேரி வரை சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இச்சாலையில் ஐடி நிறுவனங்கள், தனியார் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் செயல்படுகின்றன. இதனால் இச்சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதன் காரணமாக, ...