
சென்னை: ‘சதுரங்க வேட்டை’, ‘பப்பாளி’ படங்களில் நடித்தவர், மலையாள நடிகை இஷாரா. தற்போது ‘‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ஜோசப் லாரன்ஸ் தயாரிக்க, கேவின் ஜோசப் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடித்த இஷாரா, திடீரென்று தலைமறைவாகி விட்டதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது: இந்தப் படத்துக்காக இஷாராவை 4 லட்ச ரூபாய் சம்பளம் பேசி, 75 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். 20 நாட்கள் கால்ஷீட் கேட்டோம். 2 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தார். எனவே, அவர் ...