
சென்னை: சென்னை மாநகராட்சியில் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:10ம் வகுப்பு பொது தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு தலா ₹5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் புதிதாக துணை செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும். சென்னை மாநகராட்சியின் இடமான அண்ணா சாலை, ரிச்சர்ட்ஸ் ...