
சென்னை : புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் ஜூலை 11ம் தேதி முதல் தொடங்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான விளக்க அறிவிக்கையை (நோட்டீஸ்) தெற்கு ரயில்வே ஊழியர் சங்கங்கள் பொது மேலாளர் வசிஷ்ட ஜோரியிடம் வழங்கியுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 25 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பது உட்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ...