
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து மேலும் பலர் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் துருவி துருவி நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சிலை கடத்தல் விவகாரத்தில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சிலை கடத்தல் பிரிவு போலீசார் கூறியுள்ளனர். சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு சொந்தமான ...