
சென்னை: வித்யா மந்திர் பள்ளிக்கு ஆதரவாக மயிலாப்பூர் சாலைகளை ஒருவழி பாதையாக மாற்றியதை கண்டித்து, நேற்று பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே உள்ள வித்யா மந்திர் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர், தங்களது கார்களை சாலையோரம் நிறுத்தாமல், ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.இதுகுறித்து தமிழக அரசு, போக்குவரத்து போலீஸ், காவல் துறை அதிகாரிகள் என பலருக்கு புகார் மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ...