
சென்னை : உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த மற்றும் பொது இடங்களில் புகைபிடித்த 405 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பது மற்றும் புகையிலை ெபாருட்கள் விற்பது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு இதுகுறித்து, 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகில் சிகரெட் விற்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள், ...