
ஆலந்தூர்: சென்னை தெற்கு மாவட்டம் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், வரும் மார்ச் 1ம் தேதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, மதுரை சரவணா பன்னோக்கு மருத்துவமனை சார்பில், ஆலந்தூரில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன் தலைமை வகித்தார். தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், அவைத்தலைவர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் ...