
* விஏஓ தேர்வை தவறவிட்ட மாணவர்கள் * நெரிசலில் சிக்கிய வாகனங்கள்சென்னை,: காணொலி காட்சி மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை துவக்கி வைத்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனம் எழுப்பியதால், ஆர்.கே.நகர் தொகுதியில் 193 கோடியிலான திட்டங்களை நேரடியாக துவக்கி வைக்க ஆர்.கே.நகருக்கு வந்தார். அவரின் இந்த ஒரு நாள் வருகையே சென்னை மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுவிட்டது. ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டது, பேனர்கள், குத்தாட்டம் போன்றவற்றால் பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர். ...