
சென்னை: தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது.தமிழக சட்டப்பேரவையை நாளை காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் தனபால் கூட்டியுள்ளார். மேலும் அன்று காலை 11 மணிக்கு 2016-17ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படும். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் சமர்ப்பிப்பார். இடைக்கால பட்ஜெட் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அன்றைய கூட்டம் ...