
அண்ணா நகர்: கோயம்பேடு அருகே வயரிங் பணியில் ஈடுபட்டிருந்த எலக்ட்ரீஷியன் மின்சாரம் பாய்ந்து பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் அண்ணாநகர் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மகன் கார்த்திக் (19), எலக்ட்ரீஷியன். இவர், நேற்று மாலை கோயம்பேடு அருகே மேட்டுக்குப்பம் பாலாஜிநகர் 3வது தெருவை சேர்ந்த ராஜா வீட்டில் வயரிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அதிர்ச்சி ...