
வண்ணாரப்பேட்டை: சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை, மொத்தம் 8 மாடிகளை கொண்டது. 6வது மாடியில் வார்டு 512ல் காய்ச்சல், ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் நோயாளிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அப்போது திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்தது. இதை பார்த்ததும் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்ட நோயாளிகள், அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ...