
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 995.16 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.12,778 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள நிலக்கரியில் இயங்கும் 2X800 மெகாவாட் உப்பூர் மிக உய்ய அனல் மின் திட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 27ம் தேதி தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார். உப்பூர் அனல்மின் திட்டம் செப்டம்பர் 2019ல் நிறைவு பெற்று, நாள் ஒன்றுக்கு 38.4 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உளுந்தூர்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட 13 இடங்களில் ரூ.424 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 13 துணை ...