
சென்னை: மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இரண்டு வகுப்புகளிலும் 25 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்புக்கான தேர்வு இன்று தொடங்கி 28ம் தேதி முடிகிறது. 12ம் வகுப்புக்கான தேர்வும் இன்று தொடங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வில் நாடு முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் 14 லட்சத்து 99ஆயிரத்து 122 பேர் எழுதுகின்றனர். 12ம் வகுப்பில் நாடு முழுவதும் 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேர் ...