
சென்னை: கன்னட திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாசார மையத்தில் நேற்று மாலை நடந்தது. இவ்விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக சலனசித்ர அகாடமி, இண்டோ சினி அப்ரிசியேஷன் அமைப்புகள் இணைந்து நடத்துகிறது. கன்னடப் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யவும், கன்னடப் படங்களின் வியாபாரத்தை தமிழ்நாட்டுக்கு விரிவுபடுத்தவும் இவ்விழா நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிய நடிகை சரோஜாதேவி பேசுகையில், ‘’தமிழ்நாட்டில் உள்ள சிலரிடம் நான் ...